யாழில் படை முகாம் அமைந்திருந்த இடத்தில் பெண்ணின் எலும்புக்கூடு மீட்பு!

வெள்ளி ஓகஸ்ட் 14, 2020

கடந்த 2016 ஆம் ஆண்டுவரை படை முகாம் அமைந்திருந்த யாழ்ப்பாணம் - கொட்டடி மீனாட்சிபுரத்தில் உள்ள தனியார் காணியொன்றில் இருந்து பெண்ணொருவரின் எலும்புக்கூடு மீட்கப்பட்டுள்ளது. 

v

காணியில் கட்டிடம் ஒன்றை அமைப்பதற்கான பணிகள் இடம்பெற்றபோது எலும்புக்கூடு தென்பட்டதைத் தொடர்ந்து காணி உரிமையாளர் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு அறிவித்தார். 

நீதிமன்ற உத்தரவின்பேரில் குறித்த இடத்தில் அகழ்வு இடம்பெற்றபோது எலும்புக்கூடும் பெண்கள் அணியும்  ஆடைகளும் கண்டுபிடிக்கப்பட்டன. 

p

தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து சிறிலங்கா படையினர் யாழ்ப்பாணத்தை கைப்பற்றிய பின்னர் பல இளைஞர், யுவதிகள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டனர். 

a

பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு பின்னர் புதைக்கப்பட்டனர். பல பெண்கள் எரித்து அடையாளம் தெரியாமல் அழிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.