யாழ், இளம் குடும்பத்தர் ஒருவர் கட்டாரில் பலி!!

சனி அக்டோபர் 10, 2020

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பத்தர் ஒருவர் கட்டாரில் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.சம்பவத்தில் வடமராட்சி கரவெட்டி பகுதியை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான கனகலிங்கம் கலைச்செல்வன் (38 ) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த குடும்பஸ்தர்,நேற்றைய தினம் திடிரென சுகயீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.இந்நிலையில் அவரது சடலத்தை இலங்கை கொண்டு வருவதற்கு குடும்பத்தினர் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.