வெலிக்கடை சிறைச்சாலை ஊடாக பறந்த ட்ரோன் கமெரா!

செவ்வாய் ஓகஸ்ட் 20, 2019

வெலிக்கடை சிறைச்சாலை ஊடாக நேற்று (19) இரவு ட்ரோன் கமெரா ஒன்று சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று இரவு 8 மணி தொடக்கம் 8.15 மணிக்கிடையில் இந்த கமெரா பறந்துள்ளதாகவும், இந்த விடயம் தொடர்பில், சிறைச்சாலை அதிகாரிகள், சிறைச்சாலைகள் பணிப்பாளருக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதனையடுத்து, இந்த ட்ரோன் கமெரா தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும்  சிறைச்சாலை வளாகத்துக்குள் இவ்வாறான ட்ரோன் கமெராக்களை கண்டால் சுட்டு வீழ்த்துமாறும் பணிப்பாளர் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.