தனக்கு கொரோனாத் தாக்குதல் உள்ளதாக மிரட்டிய மருத்துவரிற்கு மூன்று வருடச் சிறை!

செவ்வாய் மார்ச் 31, 2020

லில் நகரின் நீதிமன்றம் ஒரு மருத்துவரிற்கு மூன்று வருடச் சிறைத் தண்டனை வழங்கி உள்ளது. இவர் ஜோந்தாரம் வீரர்கள் முன் வேண்டுமென்றே இருமி, தனக்கு கொரோனாத் தாக்குதல் உள்ளதாக மிரட்டியுமுள்ளார்.
 
கடந்த சனிகிகிழமை இரவு, தனது துனைவி மீது மேற்கொண்ட வன்முறையை அடுத்து, இவரைக் கைது செய்வதற்கு, ஜோந்தார்மினர் இந்த மருத்துவர் வீட்டிற்குச் சென்றுள்ளனர்.அந்தச் சமயத்திலேயே,  இந்த மருத்தவர் ஜோந்தார்ம் வீரர்களின் முகத்தின் முன்னால் வேண்டுமென்றே இருமி, அவர்களிற்கும் கொரோனாத் தொற்று வரட்டும் என்று மிரட்டி உள்ளார்.
 
வன்முறைக்குள்ளான இவரது துனைவியின் கூற்றின்படி, இந்த மருத்துவர் COVID19 தொற்றிற்கு ஆளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் மருத்தவ விடுப்பில் நின்றுள்ளார் எனத் தெரியவந்துள்ளது.
66 வயதுடைய இந்த மருத்துவரிற்கு நேற்றைய விசாரணையின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.