தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து 53,395 பேர் விடுவிப்பு

சனி அக்டோபர் 17, 2020

 தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து இதுவரை 53,395 பேர் வெளியேறியுள்ளதாகவும் 9415 பேர் முப்படையினரால் இயக்கப்படும் 86 நிலையங்களில் இன்னமும் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளதாகவும் கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை இன்று மட்டும் 198 பேர் தமது தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்து தனிமைப்படுத்தல் நிலையங்க ளிலிருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.