தமிழரசு கட்சியின் தலைமையினை கொண்ட கரைச்சி பிரதேச சபை என்ன செய்கின்றது!

திங்கள் ஓகஸ்ட் 19, 2019

கிளிநொச்சி,கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட உமையாள்புரம் கிராமசேவகர் அலுவலர் பிரிவில் வரட்சியால் பாதிக்கப்பட்ட சுமார் 300 குடும்பங்களுக்கு சிங்களப்படையினர் குடிநீர் வழங்கி வருகின்றனர்.

உமையாள்புரம் பிரதேசம் உவராலும் வரட்சியாலும் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசம் என்பதால் வருடத்தின் பெரும்பாலான நாள்கள் குடிநீர் விநியோகிக்க வேண்டிய பிரதேசமாகும்.

எனவே இங்கு திணைக்களங்களால் வழங்கப்படுகின்ற குடிநீர் போதுமானதாக இன்மையால் சிங்களப்படையினர் மேலதிகமாக குடிநீர் விநியோகத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழர்தாயகத்தில் தங்கள் பெருமைகளுக்காகவும் சுகபோகங்களுக்காகவும் மக்கள் பிரதிநிதிகளாக கதிரைகளில் அமர்ந்தவர்கள் மக்களை எவ்வாறு வழிநடத்துகின்றார்கள் என்பதை அனைத்து மக்களும் நன்கு அறிந்துகொள்ளவேண்டும்.

பல ஆயிரக்கணக்கான மக்களின் தேவைகளை நிறைவுசெய்து கொடுக்கதா தமிழரசு கட்சியின் தலைமையினை கொண்ட கரைச்சி பிரதேச சபை என்ன செய்கின்றது கிளிநொச்சி மாவட்ட மக்களே சிந்தியுங்கள்