தமிழக முதல்வரின் தாயார் மரணம்!

புதன் அக்டோபர் 14, 2020

மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடியார்  அவர்களின் தாயார் திருமதி தவசாயி அம்மாள் அவர்கள் உயிரிழந்த செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன்..


நல்ல..பண்பாளரை, நல்ல மனித நேயரை.. மக்களை காக்கும் நல்ல தலைவனை..தமிழகத்தின் மாண்பமை முதல்வரை ஈன்றெடுத்தவர் தவசியம்மாள் அவர்கள்.

பாசமிகு..கருணைமிகுந்த தன் தாயாரை இழந்து வாடும் முதல்வர் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் முக்குலத்தோர் புலிப்படைக் கட்சியின் சார்பில் எமது இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்!

இவண்

சேது.கருணாஸ் எம்.எல்.ஏ.,