திறன்வாய்ந்த வெளிநாட்டினர் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய பயண விலக்கு

திங்கள் செப்டம்பர் 07, 2020

ஆஸ்திரேலியாவின் முக்கியமான துறைகளில் பணியாற்ற அவசரமாக தேவைப்படும் திறன்வாய்ந்த வெளிநாட்டுத் தொழிலாளர்களை நாட்டிற்குள் அனுமதிக்க ஆஸ்திரேலிய அரசு திட்டமிட்டுள்ளது.

 

ஆஸ்திரேலியாவின் Priority Migration Skilled Occupation List (PMSOL)    பட்டியலின் கீழ், சுகாதாரத்துறை, இயந்திரம், கட்டுமானம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறையில் உள்ள திறன்வாய்ந்த வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய இதன் மூலம் முன்னுரிமை அளிக்கப்படுகின்றது. 

 

Priority Migration Skilled Occupation List

 • Chief Executive or Managing Director 
 • Construction Project Manager
 • Mechanical Engineer 
 • General Practitioner 
 • Resident Medical Officer
 • Psychiatrist 
 • Medical Practitioner nec 
 • Midwife 
 • Registered Nurse (Aged Care) 
 • Registered Nurse (Critical Care and Emergency) 
 • Registered Nurse (Medical) 
 • Registered Nurse (Mental Health)
 • Registered Nurse (Perioperative)
 • Registered Nurses nec 
 • Developer Programmer 
 • Software Engineer 
 • Maintenance Planner 

ஆஸ்திரேலியாவின் முக்கியமான துறைகளின் திறன் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதமாக இப்பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள 17 வேலைகள், கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய பொருளாதாரத்தை மீட்க உதவும் எனப்படுகின்றது. 

 

இப்பட்டியலில் உள்ள வேலைகளில் இடம்பெறும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய பயண விலக்கு அளிக்கப்பட்டுள்ள போதிலும், அவர்களுக்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தல் அவசியமானது எனத் தெரிவித்துள்ளார் ஆஸ்திரேலிய குடியேற்றத்துறை அமைச்சர் அலன் டஜ்