டிரம்புடன் இம்ரான்கான் தொலைபேசியில் ஆலோசனை!

சனி ஓகஸ்ட் 17, 2019

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்.

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட விவகாரத்தில் பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக இந்தியாவுக்கு எதிராக உலக நாடுகளை ஒருங்கிணைக்கும் முயற்சியை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் மேற்கொண்டு உள்ளார்.

அந்த வரிசையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன் நேற்று அவர் தொலைபேசியில் பேசினார். அப்போது, ‘காஷ்மீரில் இந்தியா மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்து பாகிஸ்தானின் கவலையை வெளியிட்ட அவர், இந்த நடவடிக்கை பிராந்திய அமைதிக்கு பங்கம் விளைவிப்பதாக இருக்கும்’ என்றும் கூறினார்.