திலீபன் நினைவேந்தலுக்குத் தடை விதிக்கப்பட்டு காவல் துறை குவிப்பு

செவ்வாய் செப்டம்பர் 15, 2020

 

தியாக தீபம் திலீபனின் நினைவு நாள் இன்று ஆரம்பமாகும் நிலையில் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் நேற்று மாலை முதல் கடுமையான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தை அனுஷ்டிக்க யாழ். நீதிமன்றம் நேற்று தடைவிதித்தது. இதனையடுத்து, நேற்று மாலை முதல் திலீபன் நினைவேந்தல் நடைபெறும் எனக் கருதும் இடங்களில் பாதுகாப்பு

நல்லூரிலுள்ள திலீபனின் நினைவுத் தூபிமற்றும் யாழ். பல்கலைக்கழகப் பகுதிகளில் அதிகளவான காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.