தேசிய அடையாள அட்டை விநியோக சேவைகள் ஒக்.23 வரை இடைநிறுத்தம்

சனி அக்டோபர் 17, 2020

 தேசிய அடையாள அட்டைகளை ஒரு நாளில் வழங்கும் சேவை ஒக்டோபர் 23 வரை இடைநிறுத்தப்படுவதாக ஆட்பதிவுத் திணைக்களம்  அறிவித்துள்ளது.

கொவிட்- 19 பரவலைக் கட்டுப்படுத்தும் முகமாகவே இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக திணைக்களத்தின் ஆணை யாளர் ஜெனரல் விஜானி குணதிலக தெரிவித்தார்.

பத்தரமுல்லையிலுள்ள பிரதான அலுவலகம் மற்றும் அனைத்து மாகாண அலுவலகங்களும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை(23) வரை மூடப்படும் என அவர் தெரிவித்தார்.

மக்கள் யாராவது ஒரு நாள் சேவைக்கு விண்ணப்பிக்க விரும்பினால் சான்றிதழுடன் காரணத்தைக் குறிப்பிடுவதுடன் பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட கிராம சேவையாளரிடம் ஒப்படைக்கலாம் அல்லது அந்தந்த மாவட்ட செயலக அலுவலகங்களிலுள்ள தேசிய அடையாள அட்டைப் பிரிவில் ஒப்படைக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

“ஒரு நாள் சேவைக்கு விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் முன்பே திகதி, நேரத்தை முன்பதிவு செய்யும் விண்ணப்பதாரிகளுக்கு அச்சேவை நடைபெறும். அவ்விண்ணப்பங்கள் இலவசமாக செயற்படுத்தப்படுவதுடன் அச்சடிக்கப்பட்ட அடையாள அட்டை கள் சம்பந்தப்பட்டவர்களின் முகவரிக்கு தபாலில் அனுப்பப்படும்” என ஆணையாளர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் அவசரத் தேவைகளுக்காக அடையாள அட்டை தேவைப்படுவோருக்கு முன்னுரிமையளிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

மேலும் பரீட்சைகளுக்காக மற்றும் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்க போன்ற அவசர நிலைமைகளின்போது விண்ணப்பதாரிகள் திணைக்களத்தின் 0115 226 126, 0115 226 115, 0115 226 100 மற்றும் 0115 226 150 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு அறிவிக்க வேண்டும்.

பொதுமக்கள்  தமது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க ஆட்பதிவுத் திணைக்களத்துக்கு நேரில் வர முடியாது.

திணைக்களத்தை மூடத் தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும் ஏற்கனவே செயற்பாட்டிலுள்ள பணிகள் இக்காலகட்டத்தில் நிறைவு செய்யப்படும் எனவும் பொதுமக்கள் மேலதிக விபரங் களுக்கு மேற்குறிப்பிட்ட தொலைபேசி எண்களில் திணைக் களத்தை தொடர்பு கொள்ளுமாறும் ஆணையாளர் தெரிவித்தார்.