தாயக உறவுகளுக்கு உதவ ஈழத்தமிழர் திரைப்பட சங்கம் அழைப்பு!

செவ்வாய் மார்ச் 31, 2020

பிரான்சில் உள்ள ஈழத்தமிழர் திரைப்பட சங்கம் தாயகத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமையைக் கருத்தில் கொண்டு, எமது உறவுகளுக்கு உதவிக்கரம் நீட்டுவதற்கு அழைப்பு விடுத்துள்ளது.

அந்த அழைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

உறவுகளுக்கு வணக்கம்!

உலகத்தில் நடந்துகொண்டிருக்கும் அசாதாரணமான சூழ்நிலையின் வெளிப்பாடுகள் நீங்கள் அறிந்தவையே .(#covid19) இதனால் நாட்டில் அமுலாக்கப் பட்டுள்ள ஊரடங்கின் நிமித்தம் அன்றாட உணவுத்தேவைக்கும்
மருந்து பொருட்களுக்கும் உதவிகள் தேவைப்பட்டால் தயவு செய்து இதில் குறிப்பிட்ட இலக்கத்தில் தொடர்பு கொண்டு தெரியபடுத்தவும்.

தொடர்பு: 00 94 777 076 723

மேற்படி ஊரடங்குச் சட்டம் அமுலில் இருப்பதால் யாரேனும் உதவ முயற்சித்தும் முடியாமல் இருக்கும்  அவர்களும் தொடர்பு கொள்ளவும் திரைப்படத்துறை கலைஞர்களாகிய நாங்கள் உங்களுக்கு உதவிக்கரம் நீட்டத் தயாராக உள்ளோம். (சட்டத்தின் அனுமதியோடு)

நன்றி…
Lift (ஈழத்தமிழர் திரைப்பட சங்கம்)
மேலதிக விபரங்களுக்கு
0033783568979