ரணில் தேசிய பட்டியலில் களமிறங்குவார்!

வியாழன் பெப்ரவரி 27, 2020

எதிர்வரும் பொதுத்தேர்தலுக்காக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தேசிய பட்டியலின் ஊடாக களமிறங்க கூடும் என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

ராகமையில் நேற்று (26) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார்.

தற்போது ரணில் விக்கிரமசிங்க மௌனமாக இருப்பது ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.