பரீட்சை மண்ட மேற்பார்வையாளர் கைது

சனி அக்டோபர் 17, 2020

தற்போது நடைபெற்று வரும் க.பொ.த உயர்தர பரீட்சையில் மாணவிக் குப் பதில்களை எழுதிக் கொடுத்தார் என்ற மோசடிக் குற்றச்சாட்டில் மேற் பார்வையாளர் ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளார்.

வாதுவ பகுதியைச் சேர்ந்த பாடசாலை ஒன்றின் பரீட்சை மண்ட ப மேற் பார்வையாளரே கைது செய்யப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர். 

பரீட்சை ஆணையர் ஜெனரல் சனத் பூஜிதவுக்கு தகவல் கொடுத்த பின் னர் குறித்த பரீட்சை மண்டபத்தின் மேற்பார்வையாளர் கைது செய்யப் பட்டுள்ளார்.