பொதுமக்களின் அபிவிருத்தி நிதியில் நவீன வசதிகளுடன் படைத்தலைமையகம்

வெள்ளி நவம்பர் 08, 2019

நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள சிறீலங்கா படை தமையகம் இன்று (08) சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் திறந்து வைக்கப்படவுள்ளது.

சிறீலங்கா படை, கடற்படை மற்றும் விமான படை ஆகிய முப்படை பிரிவுகளின் தலைமையகங்களை ஒரே இடத்தில் அமைக்கும் நோக்கில் பெலவத்த அக்குரேங்கொட பகுதியில் இந்த கட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

77 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள அரச பாதுகாப்பு மற்றும் முப்படை தலைமையகத்திற்காக கடந்த 2011 ஆம் ஆண்டு மார்ச் 11 ஆம் திகதி அடிகல் நாட்டப்பட்டது.

இதற்காக 53.3 பில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளதுடன் அது இதுவரை சிறீலங்காவில் அமைக்கப்பட்ட பாரிய கட்டட வேலைத்திட்டமாகவும் கருதப்படுகின்றது.

அதிநவீன தொழினுட்பங்களை பயன்படுத்தி அமைக்கப்பட்டுள்ள இந்த கட்டடத்தில் நவீன பாதுகாப்பு முறைமையும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

முப்படைகளின் தளபதி என்றவகையில் மைத்திரிபால சிறிசேன ஆலோசனையின் பேரில் அமைக்கப்பட்டுள்ள இந்த கட்டடத்தின் முப்படை தலைமையகம் மற்றும் காரியாலய பிரிவு ஆகியன இன்று சிறீலங்கா அதிபரால் திறந்து வைக்கப்படவுள்ளன.

இதற்கமைய நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள படை தலைமையகங்கள் அனைத்தும் ஒரே தலைமையகத்தின் கீழ் கொண்டு வரப்படவுள்ளது.

புதிய தலைமையகத்தில் சிசிடிவி கமரா அமைப்பை கண்காணிக்க 16 எல்சிடி திரைகளும் நிறுவப்பட்டுள்ளன. 19 லிஃப்ட்களும் நிறுவப்பட்டுள்ளதாக படையினர் தெரிவித்துள்ளயினர்.