பொருட்களின் மீது அந்த வைரஸ் எவ்வளவு நேரம் உயிருடன் இருக்கும் ?

புதன் மார்ச் 18, 2020

கொரோனா வைரஸ் பெரும்பாலும் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவுவதற்கான வாய்ப்புகள்தான் அதிகம் என்கிறார்கள் மருத்துவ விஞ்ஞானிகள்.

பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலில் 3 நாட்கள் இருக்கும்.

எவர்சில்வர் தண்ணீர் பாட்டிலில் 3 நாட்கள் இருக்கும்.

காற்றில் 3 மணி நேரம் இருக்கும்.

காப்பர் (செப்பு) பாட்டில் மீது 4 மணி நேரம் இருக்கும்.

பாலிபுரோபிலின் பிளாஸ்டிக் மீது 16 மணி நேரம் இருக்கும்.

 

இதை ஆராய்ந்து சொல்லி இருப்பவர், அமெரிக்காவில் ஹேமில்டன் நகரில் உள்ள ராக்கி மவுண்டைன் பரிசோதனைக்கூடத்தின் வைரஸ் சூழலியல் துறையின் தலைவர் வின்சென்ட் முன்ஸ்டர்.

 

6 அடி தூரம் இடைவெளி வேண்டும்


எத்தனை நாட்கள் கொரோனா வைரஸ் உடலில் தங்கும்?

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானவர்கள் உடனடியாக சிகிச்சை பெறத்தொடங்கி விடுகிறார்கள். அவர்களது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டாலும்கூட, கொரோனா வைரஸ் வாழத்தான் செய்யும்.

லேன்செட் மருத்துவ இதழ் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் இந்த வைரஸ் 8 முதல் 37 நாட்கள் வரை தொடர்ந்து உடலில் வாசம் செய்ய வாய்ப்பு உண்டு என்று தெரிய வந்துள்ளது.

தும்மலா, இருமலா ஓடுங்கள்

கொரோனா வைரஸ் பாதித்த ஒருவரின் தும்மல் மற்றும் இருமலில் வெளிப்படுகிற நீர்த்துளிகள் மூலம் மற்றவருக்கு இந்த கொரோனா வைரஸ் எளிதாக தொற்றிக்கொள்ளும்.

இந்த நீர்த்துளிகள் பயணிக்க சாத்தியமான தூரம் எவ்வவளவு என்றால் 6 அடிகள்.

எனவே, ஒருவர் தும்மினால், இருமினால் அந்த இடத்தில் நிற்காதீர்கள். அங்கு இருந்து 6 அடி தூரத்துக்கு அப்பாலே போய்விடுங்கள். அவருக்கு கொரோனா இருக்குமா, இருக்காதா, நாம் இங்கே இருக்கலாமா, கூடாதா என்றெல்லாம் அந்த நேரத்தில் போய் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்காதீர்கள்.