பன்ச் ஹோல் டிஸ்ப்ளே, மூன்று பிரைமரி கமரா கொண்ட கேலக்ஸி ஏ11 ஸ்மார்ட்போன்!

திங்கள் பெப்ரவரி 10, 2020

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ11 ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியிருக்கின்றன. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ11 ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியிருக்கின்றன. அந்த வகையில் கேலக்ஸி ஏ11 ஸ்மார்ட்போனின் ஃபிரேம் புகைப்படம் வெளியாகியுள்ளது. ஃபிரேம் புகைப்படத்தின் படி புதிய ஸ்மார்ட்போன் சிறிய பன்ச் ஹோல் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.

 

புதிய ஸ்மார்ட்போனில் 5000 எம்.ஏ.ஹெச். முதல் 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படும் என கூறப்படுகிறது. முன்னதாக வெளியான தகவல்களில் புதிய கேலக்ஸி ஸ்மார்ட்போனில் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படும் என கூறப்பட்டது. இத்துடன் ஸ்மார்ட்போனில் புகைப்படங்களை எடுக்க மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

கேலக்ஸி ஏ11 ஃபிரேம் புகைப்படம்

 

இந்த ஸ்மார்ட்போனின் பிரைமரி கேமரா சென்சார்கள் செங்குத்தாக பொருத்தப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது. கேலக்ஸி ஏ11 ஸ்மார்ட்போன் கேலக்ஸி ஏ10 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் என கூறப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் வழங்கப்படலாம் மற்றும் சாம்சங்கின் புதிய ஒன் யு.ஐ. 2.0 வழங்கப்படலாம் என தெரிகிறது. 

 

சாம்சங் கேலக்ஸி ஏ11 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 பிராசஸர், 2 ஜி.பி. ரேம், குறைந்தபட்சம் 32 ஜி.பி. மெமரி வழங்கப்படும் என தெரிகிறது. இதன் வெளியீடு மற்றும் இதர விவரங்கள் வரும் நாட்களில் வெளியகாலம் என எதிர்பார்க்கப்படுகிறது.