பல்கலைக்கழகங்களுக்கு அரசாங்கத்தினால் ஒதுக்கிடப்படும் நிதி பயன்படுத்தப்படாமல்...!

சனி நவம்பர் 09, 2019

இலங்கையின் பல்கலைக்கழகங்களுக்கு அரசாங்கத்தினால் வருடாந்தம் ஒதுக்கிடப்படும் நிதியில் 5 ஆயிரத்து 666 மில்லியன் ரூபா, 15 பல்கலைக்கழகங்களினால் பயன்படுத்தப்படாமல், வங்கிக் கணக்களிலேயே வைக்கப்பட்டுள்ளதாக கோப் குழு தகவல் வெளியிட்டுள்ளது.

 794 வங்கிக் கணக்குகளில் குறித்த நிதி உள்ளதாக 2017 ஆம் ஆண்டுக்கான கணக்காய்வு அறிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது.

 இதேநேரம், வருடாந்தம் வழங்கப்படும் நிதி ஒதுக்கீடுகளின் பயன்பாட்டை பெற்றுக்கொள்ளாமல், அவை அவ்வாறே வைப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதியாகும்போது, இவ்வாறு வைப்பிலிடப்பட்டு வைக்கப்பட்டிருந்த நிதி ஆயிரத்து 416 மில்லியனாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.