பிரபஞ்ச அழகியாக தென்ஆப்பிரிக்க மாடல் அழகி தேர்வு!

செவ்வாய் டிசம்பர் 10, 2019

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் அட்லாண்டா நகரில் 2019-ம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி போட்டியில் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த மாடல் அழகி சோசிபினி துன்சி என்பவர் பிரபஞ்ச அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் அட்லாண்டா நகரில் 2019-ம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவை சேர்ந்த மாடல் அழகி வர்திகா சிங் உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த 90 அழகிகள் கலந்து கொண்டனர்.

 

இவர்களில் தென் ஆப்பிரிக்கா, மெக்சிகோ, கொலம்பியோ, பியூர்டோ ரிகோ மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த 5 அழகிகள் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினர்.

இறுதியில் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த 26 வயதான மாடல் அழகி சோசிபினி துன்சி என்பவர் பிரபஞ்ச அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு கடந்த ஆண்டு பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்ட பிலிப்பைன்சை சேர்ந்த கேட்ரியோனா கிரோ மகுடம் சூட்டினார்.

2-வது இடத்தை பியூர்டோ ரிகோவின் மேடிசன் ஆண்டர்சன் பிடித்தார். மெக்சிகோவை சேர்ந்த சோபியா 3-வது இடம் பிடித்தார். இந்தியாவின் சார்பில் பங்கேற்ற வர்திகா சிங், முதல் 10 இடங்களுக்குள் வரவில்லை.