பிரான்சில் நெவர் பகுதியில் இடம்பெற்ற தமிழீழ தேசிய மாவீரர் நாள்-2019

புதன் டிசம்பர் 04, 2019

தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2019. பிரான்சின் மாநிலத்தில் ஒன்றான நெவர் என்னும் இடத்தில் 27.11.2019 புதன்கிழமை அங்கு வாழும் தமிழீழ மக்களால் உணர்வுபூர்வமாக நினைவு கூரப்பட்டது. 

n

நெவர் பகுதியில் வாழும் தமிழீழ மக்களின் உறவுகளான 12 வேங்கைகளின் திருவுருவப்படத்திற்கு முன்பாக அவர்களின் சகோதரர்களும் நிற்க பொதுச்சுடரினை தமிழீழ விடுதலை உணர்வாளர் திரு. ஆனந்தன் அவர்கள் ஏற்றி வைத்திருந்தார், தமிழீழ விடுதலைப்போரிலே முதற்களப்பலியான லெப். சங்கர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு கேணல் கிட்டு அவர்களுடன் வங்கக் கடலில் வீரகாவியமான கப்டன் அமுதன் அவர்களின் சகோதரர் ஏற்றி வைக்க துயிலுமில்லப்பாடல் ஒலிபரப்பப் பட்டது. மாவீரர் தெய்வங்களின் நினைவுகளில் கண்களில் கண்ணீரோடு; அனைவரும் நின்றிருந்தனர். தொடர்ந்து மக்கள் குழந்தைகள் என அனைவரும் சுடர்ஏற்றி மலர் கொண்டு வணக்கம் செலுத்தினர்.

n

நிகழ்வில் தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் நடாத்திய கலைத்திறன் போட்டியில் பங்கு பற்றிய மாணவர்களின் பேச்சுக்கள் இடம் பெற்றன. இவர்களுடன் தமிழ் மக்கள் மீது பற்றுக் கொண்ட பிரெஞ்சு வணபிதா JAEN வெபியர் அவர்கள் உரையாற்றியிருந்தார். முதற்தடவையாக தங்கள் நாட்டுக்காக உயிர் ஈந்தவர்களை நினைத்து வழிபாடும் வணக்கம் செலுத்துவதைக் கண்டு தான் மிகவும் சந்தோசமடைவதாகவும். தமிழர்களின் வேதனையை தான் உணருவதாகவும் ஒற்றுமையாக நின்று இந்தப் பணியில் தொடர்ந்து ஈடுபட வேண்டும் .இனிவரும் காலங்களில் தமிழ்மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து எப்போதும் உங்களோடு இருப்பேன் என்றும் கூறியிருந்தார். மண்டபத்தின் செலவினை நெவர்வாழ் சகோதரர் தானாகவே ஏற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நம்புங்கள் தமிழீழம் பாடலுடன் மாவீரர் நினைவேந்தல் நிறைவு பெற்றன.

n

n

n

n

(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - ஊடகப்பிரிவு)