பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டால், 21 நாள்களில் தூக்கு! - ஆந்திராவில் புதிய சட்டம்

புதன் டிசம்பர் 11, 2019

ஆந்திராவில் பாலியல் வழக்குகளை விரைவாக விசாரிக்க தனி நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன.

பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டால், குற்றவாளிகளுக்கு 21 நாள்களில் தூக்குத் தண்டனை விதிக்கப்படும் வகையில், ஆந்திராவில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படுகிறது.

நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் தெலங்கானாவில் திஷா என்ற பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பிறகு எரித்துக் கொல்லப்பட்டார். இதற்குக் காரணமான 4 குற்றவாளிகளை காவல்துறை என்கவுன்டர் செய்தனர். இந்த நிலையில், ஆந்திராவில் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டால், ஒரே வாரத்தில் விசாரணை நடத்தி முடிக்கப்படும். அடுத்த இரண்டு வாரங்களுக்குள் குற்றவாளி தூக்கிலிடப்படுவார்.

மொத்தத்தில் குற்றவாளிகளுக்கு 21 நாள்களுக்குள் தூக்குத்தண்டனை வழங்கும் வகையில், ஆந்திர சட்டமன்றத்தில் நாளை மசோதா தாக்கல் செய்யப்பட இருக்கிறது.