பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 44 ஆயிரத்தை நெருங்கியது

புதன் மே 20, 2020

 பாகிஸ்தானில் கொரோனா வைரசுக்கு பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 44 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

 உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பாகிஸ்தானிலும் வேகமாகப் பரவி வருகிறது. 

கொரோனா தொற்று அதிகரித்து வரும் பாகிஸ்தானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 44 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. தற்போதைய நிலவரப்படி அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 43 ஆயிரத்து 966 ஆக உயர்ந்துள்ளது.

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் ஆயிரத்து 841 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. மேலும் கொரோனாவுக்கு 36 பேர் இறந்ததால் பலி எண்ணிக்கை 939 ஆக அதிகரித்துள்ளது.