ஒரு சொல்லின் மறுபக்கம்!

புதன் சனவரி 29, 2020

முதலில்
என் பெயரைக் கேட்டார்கள்.

பிறகு அப்பாவின் பெயரை
பிறகு ஊரை.
பிறகு திசையை.
பிறகு வழியை.

கடைசியில் கட்டிக் கொண்டு
"எங்கட பிள்ளை நீ " என்றார்கள்.

இங்கிருந்து தான்
சொல்லரசியலை
நான் வெறுக்கத் தொடங்குகிறேன்.

எங்கட கிணறு
எங்கட கோயில்
எங்கட பூசை
எங்கட பாதை
எங்கட சுடலை

எல்லாவற்றின் மீதும்
காலங்காலமாய் படர்ந்திருக்கிறது
ஒரு அசிங்கத்தின் ஒற்றுமை.

"எங்கட" என்பதின் மறுபுறத்தில்
நாங்கள் பிரிந்து நிற்கிறோமென்று
யார் நமக்குப் புரிய வைப்பது?

---xxx---

தீபிகா
29.01.2020
04.38 Pm.