ஒப்ரேசன் சாணக்கியா 2.0: திரைவிலகும் எதிர்ப்புரட்சி நடவடிக்கை – 6- கலாநிதி சேரமான்

செவ்வாய் ஜூலை 14, 2020

காத்தான்குடிப் படுகொலைகளின் உண்மையான சூத்திரதாரிகள் யார்?

தமிழ் - முஸ்லிம் சமூகங்களிடையே நல்லுறவை ஏற்படுத்தி, இரு சமூகங்களும் தமிழ் பேசும் தேசிய இனம் என்ற குடையின் கீழ் தமது அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் பொழுதெல்லாம் முஸ்லிம் தரப்பில் இருந்து முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் முக்கியமானவை, ‘காத்தான்குடி பள்ளிவாசலில் முஸ்லிம்களை விடுதலைப் புலிகள் படுகொலை செய்தார்கள், வடக்கில் இருந்து முஸ்லிம்களை விடுதலைப் புலிகள் வெளியேற்றினார்கள்’ போன்றவை தான். இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பவர்கள், முஸ்லிம் ஆயுதபாணிகளால் தென்மிழீழத்தில் ஆயிரக்கணக்கில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதைப் பற்றியெல்லாம் பேசுவதில்லை.

மேலும்...