முன்னிலை சோசலிச கட்சியின் முதலாவது மாநாடு 13 ஆம் திகதி

புதன் அக்டோபர் 09, 2019

முன்னிலை சோசலிசக்  கட்சியின் முதலாவது மாநாடும் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரக்கூட்டமும் எதிர்வரும் 13 ஆம் திகதி   சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கில்  காலை 10 மணிக்கு  இடம்பெறவுள்ளதாக அக் கட்சி அறிவித்துள்ளது.  

இது  தொடர்பில்  முன்னிலை சோசலிசக் கட்சியின்  ஜனாதிபதி  வேட்பாளர்  துமிந்த நாகமுவவிடம் வினவியபோது,

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் முடிவடைந்துள்ள  நிலையில் பிரதான கட்சிகள் தமது பிரசாரக் கூட்டங்களை  ஆரம்பித்துள்ளன.

இந் நிலையில், சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இடம் பெறவுள்ள எமது கட்சியின் முதலாவது மாநாட்டுடன்  பிரச்சார  நடவடிக்கைகளைஆரம்பிக்க  தீர்மானித்துள்ளோம் என்றார்.