முகநூல் ஊழியர்கள் பத்து ஆண்டுகளுக்கு வீட்டிலிருந்தே பணியாற்றுவார்கள்!!

சனி மே 23, 2020

கொலைகார கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் உலுக்கி வருகிறது. இந்த கொடிய வைரஸ் உயிரிழப்புகளை மட்டும் இன்றி வேலையிழப்பு,பொருளாதார சரிவு போன்ற பல பாதிப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது.

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள பெரும்பாலான நாடுகள் தேசிய அளவில் ஊரடங்கை அமல்படுத்தி,மக்களை வீடுகளுக்குள்ளேயே இருக்க சொல்லி வலியுறுத்து வருகின்றன.

இதனால் பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதித்துள்ளன.ஊரடங்கு முடியும் வரையிலும் வீட்டிலிருந்தே பணிபுரியும் நடைமுறையை நிறுவனங்கள் கடைப்பிடிக்கும் என தெரிகிறது.

இதற்கிடையே, கூகுள் பேஸ்புக் போன்ற நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து வேலை பார்க்கும் காலத்தை சமீபத்தில் நீட்டித்தன.

இந்நிலையில், பேஸ்புக்கின் 50 சதவீத ஊழியர்கள் அடுத்த 5 முதல் பத்து ஆண்டுகளுக்கு வீட்டிலிருந்தே பணியாற்றுவார்கள் என அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர் பெர்க் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, மார்க் ஜுகர் பெர்க் கூறுகையில்,கொரோனா பரவல் உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் இன்னும் முழுமையாக கட்டுக்குள் வராமல் உள்ளது.

இதனால் பேஸ்புக் நிறுவனத்தின் பாதி ஊழியர்கள் அடுத்த 5 முதல் 10 ஆண்டுகள் வரை வீட்டிலிருந்தே பணியாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.