மேய்ச்சல்தரை நிலத்தை சட்டபூர்வமாக அங்கீகரிக்கவும்!

சனி அக்டோபர் 17, 2020

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகம் மற்றும் ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச செயலகப் பிரிவுகளை உள்ளடக்கிய மயிலத்தமடு மாதவனை பகுதியில் கால்நடைகளுக்கென ஒதுக்கப்பட்ட மேய்ச்சல்தரை நிலத்தை சட்டபூர்வமாக அங்கீகரிக்க கோரி இலங்கை மக்கள் தேசிய கட்சி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று சனிக்கிழமை காலை 9.00 மணியளவில் மட்டக்களப்பு காந்திப்பூங்காவில் இலங்கை மக்கள் தேசிய கட்சி தலைவர் நா.விஷ்ணுகாந்தன் தலைமையில் பால்பண்ணையாளர்களும் இணைந்து, கொவிட்19 தொற்றுநோயினைக் கருத்தில் கொண்டு பொதுச் சுகாதார நடைமுறைகளையும் சமூக இடைவெளியையும் கவனத்தில் கொண்டு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

முயிலத்தமடு மாதவனை பகுதியில் அத்துமீறிய வெளிமாவட்டத்தவர்களது குடியேற்றத்தை நிறுத்துங்கள், கால்நடை பண்ணையாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள், கால்நடைகளின் உணவு மற்றும் பாதுகாப்பு தேவைகளை நிறைவேற்றுங்கள், மாவட்டம் காணாமல் போகிறது கண்டுபிடித்துத் தாருங்கள், வேண்டும் வேண்டும் மயிலத்தமடு மாதவனை மேய்ச்சதல்தரை வேண்டும், மாடுகள் உணவு உண்டு வாழ வழிவிடுங்கள் பிரதமரே போன்ற வாசகங்கள் அடங்கிய சுலோகங்களை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை இராணுவ மற்றும் தேசிய புலனாய்வுப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் ஏராழமானவர்கள் வருகை தந்து ஆர்ப்hட்டங்களில் ஈடுபட்டவர்களை புகைப்பிடித்தமை குறிப்பிடத்தக்கது.

இங்கு கருத்துத் தெரிவித்த இலங்கை மக்கள் தேசிய கட்சியின் தலைவர் நா.விஷ்ணுகாந்தன் மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுபோகம் , பெரும்போக நெற்செய்கை காலங்கள் வரும் போது பண்ணையார்கள் தங்களது கால்நடைகளை அழைத்துச் செல்வதில் ஒவ்வொரு வருடமும் பிரச்சினைகள் வந்துகொண்டிருக்கின்றன. ஆனால், இந்தவருடத்தில் வேறொரு உருவத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

கால்நடைகளை மேய்ப்பதற்கான நிலமாகக் காணப்பட்ட போதிலும், அது மகாவலலி விவசாயத்திற்கு ஒதுக்கப்பட்டதாக தெரிவித்து காடழிப்பு இடம்பெறுகிறது. ஆறு மாதகால்திற்கு ஒரு ஏக்கருக்கு நான்கு நூறு ரூபா வீதம் மகாவலி செலுத்த வேண்டும் என விவசாயி ஒருவர் தெரிவித்ததாக விஷ்ணுகாந்தன் தெரிவித்தார். இவர்கள் பொலநறுவை மாவட்டம் மன்னபிட்டி, தெஹித்தகண்டி, சிறிபுர, பக்கமுன, இவ்வாறு பல இடங்களைச் சேர்ந்தவர்கள்
மட்டக்களப்பு மாவட்டம் ஒரு கச்சேரி மற்றும் 14 பிரதேச செயலகங்களையும் கொண்ட மாவட்டத்தில் விவசாயத்திற்கு போனவர்கள், ஏன் வெளிமாவட்டங்களை அழைத்துவந்து இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடுகின்றார்கள். அவ்வாறு விவசாயம் செய்வதனால், கால்நடை பண்ணையாளர்க்கும் நிலத்தை ஒதுக்கிக் கொடுத்து, பாராளுமன்றத்தில் வர்த்தமானியில் அறித்தல் செய்யலாம்.

நெற்ச் செய்கையின் போது, அதற்கான உணவு மற்றும் நீர்;வசதிகளையம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். ஆனால் அவ்வாறு எதுவும் இல்லை. அத்துடன், மாவட்ட அபிவிருத்தி கூட்டத்தில் கால்நடைகளை உரிய திகதிற்கு முன்னர் அழைத்துச் செல்லும்படி தீர்மானம் எடுக்கின்றார்கள்.

ஆனால், கால்நடைகளுக்கு மாத்திரமல்ல அங்கு பண்ணையாளர்களுக்கு கூட குடிப்பதற்கு நீர்கூட இல்லை. எவ்விதமான அடிப்படைவசதிகளுமின்றி அப்பகுதிச் செல்லும் பண்ணையாளர்கள் தங்களின் ஜூபனோபாயத் தொழிலைச் செய்வதற்கான செல்கின்றனர்.

நாளாந்தம் ஆறு ஆயிரத்திற்கும் மேற்பட்ட லீற்றர் பால் பெறப்படுகிறது. அது நாட்டில் உள்ள மக்களின் பல்வேறு உணவுத் தேவைகளை பூர்த்தி செய்கிற போதிலும், அந்தகால்நடைகளுக்கு நீர் இல்லாத நிலைதான் காணப்படுகிறது. இந்தகால்நடைகள் மாதுஓயா ஆற்றில்தான் நீருக்கு செல்லவேண்டியுள்ளது.

இதனால் விவசாயம் செய்பவர்கள் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்துகின்றார்கள். இது எதிர்காலத்தில் இனமுறுகளைக் கூட ஏற்படுத்தும் நிலையைக் கொண்டுவரும் என்றார்.

இந்த நாட்டின் பொருளாதாரம் விவசாயத்தில் தங்கியுள்ளது. எனவே, விவசாயத்தை செய்வதற்கும் பொருத்தமான இடங்களை தெரிவு செய்து வழங்க வேண்டியது அரச அதிகாரிகளின் கடமையாகும். மகாவலி அபிவிருத்தித் திணைக்களகம் மேற்கொண்டுள்ள இவ்வாறான நடவடிக்கை இன ஐக்கியத்தை பாதிப்பதுடன், எதிர்காலத்தில் மாவட்டத்தில் வன்முறையையும் ஏற்படுத்தும் எனவும் தெரிவித்தார்.

எனவே, கால்நடைகளின் மேய்ச்சல்தரை பகுதியில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக ஜனாபதிபதிக்கும் பிரதமர் மற்றும் விவசாய அமைச்சர் ஆகியோருக்கு பூரண விளக்கம் இல்லை என நினைக்கின்றேன்.

மாவட்ட அபிவிருத்திக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கின்றார்கள் ஆனால், இன்றுவரைக்கம் எதுவும் நடைபெறவில்லை. அரசாங்கத்தின் கட்சி சார்பாக ஒரு பிரதியமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினரும் இருக்கின்றார்கள். அவர்கள் இந்த ஆக்கிரமிப்புத் தொடர்பாக சரியான ஒரு தீர்மானத்தைக் கொண்டுவர முடியும் அதுஎதுவும் இடம்பெறவில்லை.

எனவே, இந்த விடயம் தொடர்பாக மகாவலி மற்றும் இரு பிரதேச செயலாளர்க்கும் மனுக்களை கொடுத்துள்ளோம். எதிர்வரும் காலத்தில் இப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் எது போராட்டம் தொடரும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.