குளத்தில் குளிக்கச் சென்ற சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி பலி!!

வெள்ளி மே 29, 2020

அநுராதபுரம்–ஹொரவபொத்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முக்கறவெவ பிரதேசத்தில் குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான்.

இச்சம்பவம் இன்று (29) மாலை 5.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.இவ்வாறு உயிரிழந்தவர், 17 வயதுடைய கிண்ணியா அண்ணல் நகர் பகுதியைச் சேர்ந்த கிண்ணியா தேசிய பாடசாலை மாணவன், நஜிமுதீன் எம்.ரிஷாத் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.கிண்ணாவில் இருந்து உறவினர் வீட்டுக்கு சென்ற போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.