கத்தாரில் உள்ள அனைத்து பணப் பரிமாற்ற நிலையங்களும் (Exchange Center) நாளை முதல் மூடப்படும்

வியாழன் மார்ச் 26, 2020

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த (27.03.2020) நாளை முதல் அணைத்து பணப் பரிமாற்ற நிலையங்களும் மூடப்படும் என்று கத்தார் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதற்க்கு பகரமாக அனைத்து பணப் பரிமாற்றங்களும் ஒன்லைன் மூலம் செய்வதற்குரிய தீர்வுகளையும் விரைவில் கத்தார் மத்திய வங்கி அறிவிக்க இருக்கிறது.

கத்தார் நாட்டில் பரவலாகப் பயன்படுத்தப்படும் அனைத்து மொழிகளிலும் தங்கள் மின்னணு சேவைகளை விளம்பரப்படுத்தவும் மத்திய வங்கி அழைப்பு விடுத்துள்ளது.