கடற்கரும்புலிகள் மேஜர் அருமை,கப்டன் தணிகை உட்பட்ட மாவீரர்களினது வீரவணக்க நாள்!

புதன் அக்டோபர் 02, 2019

முல்லைக் கடற்பரப்பில் காவியமான கடற்கரும்புலிகள் மேஜர் அருமை, கப்டன் தணிகை உட்பட்ட 5 மாவீரர்களினதும், அம்பாறை மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் காவியமான 9 மாவீரர்களினதும் 24ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

02.10.1995 அன்று முல்லைத்தீவு கடற்பரப்பில் வைத்து சிறீலங்கா கடற்படையின் தரையிறங்குகலம் மற்றும் டோறா பீரங்கிப் படகு என்பவற்றின் மீதான தாக்குதலின்போது

கடற்கரும்புலி மேஜர் அருமை
(செல்லத்துரை விஜயானந்தன் – புத்துவெட்டுவான், கிளிநொச்சி)

கடற்கரும்புலி கப்டன் தணிகை
(கணபதிப்பிள்ளை வதனா – யாழ்ப்பாணம்)

லெப்.கேணல் இளநிலா
(செல்வராசா அனுராஜினி – இராமநாதபுரம், கிளிநொச்சி)

111

கப்டன் சுஜீவன் (யோகராசா)
(இராசரத்தினம் இராஜேந்திரன் – களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு)

லெப்டினன்ட் அமுதன்
(ஏகாம்பரம் குலசிங்கம் – வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்)

ஆகியோர் வீரச்சாவைத் தழுவினர்.

இம் மாவீரர்களினதும் இதேநாள் அம்பாறை மாவட்டம் 40ம் கிராமம் பகுதியில் சிறீலங்கா படையினருடனான மோதலின்போது வீரச்சாவைத் தழுவிய

வீரவேங்கை நாவலன் (பிரபா)
(சின்னத்தம்பி இராசநாயகம் – ஆரையம்பதி, மட்டக்களப்பு)

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!