கடற்கரும்புலிகள் லெப்.கேணல் பழனியப்பன்,லெப்.கேணல் அருந்தவம் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்!

புதன் அக்டோபர் 14, 2020

14.10.1999 அன்று 200ற்கு அதிகமான போராளிகளை கடல் வழியாக வன்னியிலிருந்து திருகோணமலைக்கும் பின்னர் திருமலையிலிருந்து வன்னிக்கும் கொண்டு செல்லும் நடவடிக்கையின் போது முல்லைத்தீவு மாவட்டம் கொக்குளாய்க் கடற்பரப்பில் சிறீலங்கா கடற்படையினருடனான நேரடி மோதலின் போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட படகு விபத்தில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலி லெப். கேணல் அருந்தவம், கடற்கரும்புலி லெப். கேணல் புவனேஸ், கடற்கரும்புலி மேஜர் பரணி, கடற்கரும்புலி மேஜர் சூரியப்பிரபா, கடற்கரும்புலி மேஜர் கலைமகள், கடற்கரும்புலி கப்டன் சுதாகரன் ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 21ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

111

111

111

111

111

111

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது தம் பாசமுடன் பொத்தி வழர்த்த பிள்ளைகளை தாயக விடுதலைக்காக உகந்தளித்த எம் மக்களிற்கும் எமது தலைகளை ஒருசில கனநேரம் தாழ்த்தி வீரவணக்கத்தினை செலுத்துவோம்.

111