கடற்கரும்புலி மேஜர் நிலவன்,கடற்கரும்புலி கப்டன் மதன் வீரவணக்க நாள்!

புதன் ஓகஸ்ட் 26, 2020

கடற்கரும்புலி மேஜர் நிலவன் (வரதன்)
கந்தசாமி இராமசந்திரன்
கள்ளிச்சை, வடமுனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.08.1993

கடற்கரும்புலி கப்டன் மதன்
சீனிவாசகம் சிவகுமார்
எல்லைவீதி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.08.1993

கிளாலி கடல்நீரேரியில் போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் மீது தாக்குதல் நடத்தவந்த சிறீலங்கா கடற்படையினர் மீது தாக்குதலை மேற்கொண்டு இரு நீரூந்து விசைப்படகுகளை மூழ்கடித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் நிலவன்(வரதன்) மற்றும் கப்டன் மதன் ஆகியோரின் நினைவுநாள் (26.08.1993) இன்றாகும்.

26.08.1993 அன்று கிளாலி நிரேரியூடாக போக்குவரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மக்களைத் தாக்கவந்த சிறிலங்கா கடற்படையினர் மீது தாக்குதலை நடாத்தி, கடற்படையின் இரு நீருந்து விசைப்படகுகளைத் தாக்கி மூழ்கடித்து கடற்கரும்புலிகள் இருவர் உட்பட ஐந்து போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

அவர்களின் விபரம் வருமாறு:

1. கடற்கரும்புலி மேஜர் நிலவன் (வரதன்)

(கந்தசாமி இராமசந்திரன் – கள்ளிச்சை, வடமுனை, மட்டக்களப்பு)

2. கடற்கரும்புலி கப்டன் மதன்

(சீனிவாசகம் சிவகுமார் – மட்டக்களப்பு)

3. கடற்புலி கப்டன் சிவா

(முத்துலிங்கம் கருணாநாதன் – குச்சவெளி, திருகோணமலை)

4. கடற்புலி லெப்டினன்ட் பூபாலன்

(சுந்தரராஜ் பாஸ்கரன் – நாகர்கோவில், யாழ்ப்பாணம்)

5. கடற்புலி 2ம் லெப்டினன்ட் சுரேந்திரன்

(சபாரத்தினம் சிவாகரன் – புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு)


தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.