கடற்கரும்புலி லெப்.கேணல் சோலைநம்பி,கடற்கரும்புலி மேஜர் வேங்கை உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்!

வியாழன் பெப்ரவரி 13, 2020

விடுதலைப்புலிகளின் பலத்தை அதிகரிக்கும் நோக்கோடு 12.02.1996 அன்று முல்லைத்திவை நோக்கி வந்துகொண்டிருந்த வேளை திருகோணமலைக்கு உயர்வாக 70 கடல்மைல் தொலைவில் வைத்து இந்தியக் கடற்படையால் மறிக்கப்பட்டு சிறீலங்காக் கடற்படையிடம் கையளிக்கப்பட்டது.

கடற்புலிகளின் அணிகள் சென்று கப்பலில் இருந்த சில தளபாடங்களையும் ,மாலுமிகளையும் மாற்றி எடுத்துக்கொண்டு அந்த கப்பலில் கடற்கரும்புலிகள் லெப்.கேணல் தோழைநம்பி, மேஜர் வேங்கை உட்பட கடற்புலி மேஜர் இலங்கேஸ்வரன் மூவருமாக முல்லைத்தீவு நோக்கி கப்பலை நகர்த்திக்கொண்டிருந்த தருணத்தில் ஏற்பட்ட சில மணித்தியால கடற்சமரின் பின்.

முல்லைத்திவிற்கு 26 கடல்மைல் தொலைவில் வைத்து சிறீலங்காப் படையினரின் விமானப் படையின் புக்காரா விமானக் குண்டுவீச்சில் வீரகாவியமான கடற்கரும்புலிகள், கப்டன் வாணன், கப்டன் அருள் உட்பட கடற்புலிப் போராளிகளின் 24ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

கடற்கரும்புலி லெப்.கேணல் மதன் (சோலைநம்பி)
யோகச்சந்திரன் ரதீஸ்குமார்
வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.02.1996
 
கடற்கரும்புலி மேஜர் வேங்கை
சூசைப்பிள்ளை செல்வக்குமார்
பொலிகண்டி, வல்வெட்டித்தறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.02.1996
 
கடற்புலி மேஜர் இலங்கேஸ்வரன்
இராசமாணிக்கம் சுரேஸ்
வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.02.1996
 
கடற்புலி கப்டன் வாணன் (மைக்கல்)
சச்சிதானந்தசிவம் ஆனந்தகீர்த்தன்
இமையாணன், உடுப்பிட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.02.1996

கப்டன் அருள்
இளையதம்பி புஸ்பலதா
துறைநீலாவணை, அம்பாறை
வீரச்சாவு: 13.02.1996 

தாயக விடுதலை வேண்டி இதே நாளில்  தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!