கடல் நீர் அதிக வேகமாக உறிஞ்சப்படும் முல்லைத்தீவு கடற்பரப்பில் ஏற்பட்ட மாற்றம்!

வியாழன் அக்டோபர் 17, 2019

நீர்த்தாரைகள் எனப்படும் அரிதாக நிகழக்கூடிய அதிசய நிகழ்வு நேற்று முல்லைத்தீவின் ஆழ்கடலில் நிகழ்ந்துள்ளது. குறித்த மாவட்டத்தில் தற்பொழுது கடும் வறட்சியான, வெப்பமான காலநிலை மாற்றமடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு பருவநிலை மாற்றம் ஏற்படும் போது இதுபோன்ற அதிசய நிகழ்வுகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் நேற்று ஏற்பட்ட இந்த அதிசய நிகழ்வின் போது கடல் நீர் அதிக வேகமாக உறிஞ்சப்பட்டு மேகமாக மாறியதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் அரிதாக நிகழக்கூடிய இந்நிகழ்வை கடற்கரையோரம் வசிக்கும் மக்கள்,மீனவர்கள்,கடலில் பயணம் செல்வோர்,வானியல் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் அதிகம் காண வாய்ப்புகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.