கரும்புலி லெப்.கேணல் மதியழகி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்!

புதன் செப்டம்பர் 09, 2020

வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள வன்னி கூட்டுப்படைத் தலைமையகம் மீதும், அங்கு பொருத்தப்பட்டிருந்த வானூர்தி கண்காணிப்பு கருவி (விமான ராடர்) மீதும் 09.09.2008 அன்று மேற்கொள்ளப்பட்ட விடுதலைப் புலிகளின் மும்முனை (கரும்புலித்) தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக்கொண்டகரும்புலி லெப். கேணல் வினோதன், கரும்புலி லெப். கேணல் மதியழகி, கரும்புலி மேஜர் நிலாகரன், கரும்புலி மேஜர் ஆனந்தி, கரும்புலி கப்டன் எழிலகன், கரும்புலி கப்டன் கனிமதி, கரும்புலி கப்டன் நிமலன், கரும்புலி கப்டன் அறிவுத்தமிழ், கரும்புலி கப்டன் அகிலன், கரும்புலி கப்டன் முத்துநகை ஆகிய கரும்புலி மாவீரர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

வான் புலிகள் மற்றும் கேணல் கிட்டு பீரங்கிப் படையணி ஆகியவற்றின் துணையுடன் 09.09.2008 அன்று இப்பத்து கரும்புலி வீரர்களும் வவுனியாவில் அமைந்துள்ள வன்னி கூட்டுப்படைத் தலைமையகத்திற்குள் ஊடுருவி சிறீலங்கா படையினருக்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

111

இத் தாக்குதலில் சிறப்பாக செயற்பட்ட படையணிப் தளபதிகளும், பொறுப்பாளரும், போராளிகளும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் பாராட்டுப் பெற்று பல விருதுகள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கரும்புலி லெப்.கேணல் மதியழகி
இரத்தினசாமி யோகேஸ்வரி
மல்லாவி, முல்லைத்தீவு
வீரச்சாவு: 09.09.2008

கரும்புலி லெப்.கேணல் வினோதன்
இராசத்தினம் பிரதாப்
வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.09.2008

கரும்புலி மேஜர் நிலாகரன்
முனியாண்டி ஜீவராசா
கிளிநொச்சி
வீரச்சாவு: 09.09.2008

கரும்புலி மேஜர் ஆனந்தி
சாந்தகுமார் விஜயலட்சுமி
மன்னம்பிட்டி, பொலநறுவை
வீரச்சாவு: 09.09.2008

கரும்புலி கப்டன் அறிவுத்தமிழ்
வையாபுரி சசிகலா
சமயபுரம்
வீரச்சாவு: 09.09.2008

கரும்புலி கப்டன் அகிலன்
இராசகுலேந்திரன் கேதாரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.09.2008

கரும்புலி கப்டன் எழிலகன்
கிருஸ்ணபிள்ளை பிரபாகரன்
பருத்தித்துறை
வீரச்சாவு: 09.09.2008

கரும்புலி கப்டன் முத்துநகை
சிவகுருநாதன் சிவரோகினி
முகாவில், இயக்கச்சி
வீரச்சாவு: 09.09.2008

கரும்புலி கப்டன் நிமலன்
தவராசா தவக்குமார்
அக்கரைப்பற்று
வீரச்சாவு: 09.09.2008

கரும்புலி கப்டன் கனிமதி
திருநாவுக்கரசு தாட்சாயினி
நேரடம்பன், பூநகரி
வீரச்சாவு: 09.09.2008

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது தம் பாசமுடன் பொத்தி வழர்த்த பிள்ளைகளை தாயக விடுதலைக்காக உகந்தளித்த எம் மக்களிற்கும் எமது தலைகளை ஒருசில கனநேரம் தாழ்த்தி வீரவணக்கத்தினை செலுத்துவோம்.

000