கோட்டாபயவுக்கு ஆதரவு-பிரபா கணேசன்

புதன் அக்டோபர் 09, 2019

சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பிரபா கணேசன் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டார்.தான் கோட்டாவிடம் முன்வைத்த 20 கோரிக்கைகளினையும் அவர் ஏற்றுக்கொண்டமை காரணமாகவே ஆதரவளிக்க தீர்மானித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போதைய ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், நாட்டின் பாதுகாப்பும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக பிரபா கணேசன் குறிப்பிட்டார்.அத்துடன், கோட்டாபய ராஜபக்ஷவினால் மாத்திரமே சிறுபான்மையினரின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த முடியும் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.