கோட்டாபயவுக்கு ஆதரவாக மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் பி.சந்திரகுமார் தேர்தல் பிரசாரபணியில்!

புதன் அக்டோபர் 09, 2019

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல்கள் நிறைவடைந்துள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பொதுஜன பெரமுன முதலாவது தேர்தல் பிரசாரத்தினை ஆரம்பித்திருந்தது.

பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் பி.சந்திரகுமார் தலைமையில் இந்த தேர்தல் பிரசாரபணிகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பித்து வைக்கப்பட்டன.

மட்டக்களப்பு- கல்லடி பாலத்தில் இருந்து பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவினை ஆதரிக்கும் வகையில் இந்த பிரசாரப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபயவினை  ஆதரிக்கும் வகையில் பல்வேறு துண்டுப்பிரசுரங்கள் விநியோகம் செய்து வைக்கப்பட்டன.இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் பி.சந்திரகுமார் உட்பட கட்சியின் உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.