கொரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்கள் சிறிலங்காவுக்கு வழங்கியது அமெரிக்கா

சனி அக்டோபர் 17, 2020

கொரோனா தொற்றுப் பரவலை தடுக்கும் பாதுகாப்பு அங்கிகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் அடங்கிய ஒருதொகுதி பொருட்களை அமெரிக்கா சிறிலங்காவுக்கு வழங்கியுள்ளது. 

சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சியிடம் அமெரிக்கத் தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் (Alaina B. Teplitzஇவற்றைக் கையளித்துள்ளார்.

1 இலட்சத்து 91 ஆயிரம் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களே இவ்வாறு சுகாதார அமைச்சரிடம் நேற்று கையளிக்கப்பட்டுள்ளன.

கொரோனா தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இலங்கைக்கு இப் பாதுகாப்பு அங்கிகளின் பயன்பாடு மிகவும் முக்கியமானதாகக் காணப்படுமென அமெரிக்கத் தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா தொடர்ந்தும் தனது பங்களிப்பை வழங்குமெனவும் அவர் கூறியுள்ளார்.