கொலைகாரர்களுக்கு எதிராக பிரதமர் எடுத்த நடவடிக்கை என்ன?

சனி ஓகஸ்ட் 17, 2019

கொலைக் கலாசாரம் மீண்டும் தலைதூக்கு வதற்கு இடம் தரப் போகிறீர்களா எனப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் வைத்துக் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இந்தக் கேள்வி கொலைகள் நடந்துள்ளன என்பதை அவர் ஏற்றுள்ளார் என்று பொருள்படும்.

இங்கு நாம் கேட்பதெல்லாம் கொலை செய்தவர்கள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு எடுத்த சட்ட நடவடிக்கை என்ன என்பதுதான்.

கொலைக் கலாசாரம் மீண்டும் ஏற்பட அனு மதிக்கப் போகிறீர்களா?

என்று இந்த நாட்டின் பிரதமர் கேட்கிறார் எனில், கொலை செய்த வர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தாதது ஏன் என்று அவரிடம் மக்கள் கேள்வி கேட்பதில் நியாயம் இருக்கவே செய்கிறது.

கொலையாளிகளைச் சட்டத்தின் முன்நிறுத்தி உரிய தண்டனையை அவர்களுக்குப் பெற்றுக் கொடுத்திருந்தால், கொலைக் கலாசாரத்தை மீண்டும் ஏற்படுத்துவதற்கு உடந்தையாக இருக்கப் போகிறீர்களா? என்று மக்களைப் பார்த்து கேள்வி எழுப்புகின்ற தேவை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஏற்பட்டிருக்காது.

அதிலும் ஆட்சி அதிகாரத்தில் இருக்கின்ற பிரதமர்;கொலைக் கலாசாரம் என்று குறிப் பிடும்போது கொலை செய்தவர்கள் யார்? அவர்கள் யாரைக் கொலை செய்தனர் என்ற விபரங்களையயல்லாம் அவர் அறிந்துள்ளார் என்றே கருத வேண்டும்.

ஆக, கொலையாளிகள் யார் என்று தெரிந்திருந்தும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனும்போது இந்த அர சாங்கம் கொலையாளிகளைப் பாதுகாத்துள்ளது என்ற குற்றச்சாட்டு எழுவதில் நியாயம் இருக்கவே செய்யும்.

எனவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தேர்தலை மையப்படுத்தி சில விடயங் களை முன்வைக்கிறார் என்பதே உண்மை.

இந்த உண்மை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத் தெரியாமல் இருக்க நியாயமில்லைஆகையால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க;கொலையாளிகளை, கொலைக்கலாசாரத்தை ஏற்படுத்தியவர்களை உடன் கைது செய்து அவர்களைச் சட்டத்தின் முன்நிறுத்த வேண்டு மென்ற கோரிக்கையை கூட்டமைப்பு விடுக்க வேண்டும்.

இல்லையேல் எல்லாம் அரசியல் பதவிக் கான செற்ரப் என்று மட்டுமே கூறமுடியும்.ஆம், வன்னிப் பெருநிலப்பரப்பில் நடந்த யுத்தமானது தமிழின அழிப்பு என்று சர்வதேச சமூகம் கூறியிருக்கின்ற நிலையில்,

யுத்தம் முடிந்தவுடன் இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என்று இன்றுவரை எதுவும் தெரியாமல் இருக்கையில்,சர்வதேசப் போர்க்குற்ற விசாரணை நடத் தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் சர்வ தேச மட்டத்தில் எழுந்திருக்கும்போது,

சர்வதேச விசாரணை என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறியவர்கள் இப்போது கொலைக் கலாசாரம் பற்றிப் பேசுகின்றனர்.எல்லாம் ஏமாற்று நாடகமும் நடிப்பும் என்பதை எம் தமிழ் மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதுதான் நம் விருப்பம்.

நன்றி வமம்புரி