கண்டங்களுக்கு இடையிலான மிகப்பெரிய ஏவுகணையை காட்சிப்படுத்தியது வடகொரியா

திங்கள் அக்டோபர் 12, 2020

வடகொரியா மிகப்பெரும் கண்டங்களுக்கு இடையிலான ஏவுகணையை தனது இராணுவஅணிவகுப்பில் காட்சிப்படுத்தியுள்ளது.

சனிக்கிழமை அதிகாலைக்கு முன்பாக இடம்பெற்ற இராணுவஅணிவகுப்பில் முன்னர் ஒருபோதும் இல்லாதவகையில் வடகொரியா தனது மிகவும் கண்டங்களுக்கு இடையிலான ஏவுகணையை காட்சிப்படுத்தியுள்ளது.

இரண்டுவருடங்களுக்கு பின்னர் வடகொரியா முதல்முறையாக தனது நீண்;ட தூர ஆயுதங்களை காட்சிப்படுத்தியுள்ளது.

வடகொரியா இன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஏவுகணை செயற்பாட்டிற்கு வந்தால் உலகின் தரைவழியாக நகர்த்தக்கூடிய உலகின மிகப்பெரும் கண்டங்களுக்கு இடையிலான ஏவுகணையாக அது காணப்படும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஏவுகணை ஒரு இராட்சசன் என ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.  வடகொரியா ஹ்வாசோங் 15 ஏவுகணைகளையும், புதிய நீர்மூழ்கி கண்டங்களுக்கு இடையிலான ஏவுகணையையும் காட்சிப்படுத்தியுள்ளது.

வடகொரிய ஜனாதிபதி அமெரிக்க ஜனாதிபதி உட்பட சர்வதேச தலைவர்களை சந்திக்க ஆரம்பித்த பின்னர் அந்த நாடு ஏவுகணைகளை காட்சிப்படுத்தியுள்ளமை இதுவே முதல்தடவை

இதேவேளை இன்றைய நிகழ்வில் உரையாற்றிய வடகொரிய ஜனாதிபதி நாங்கள் தொடர்ந்தும் எங்கள் தேசிய பாதுகாப்பு சக்தியை கட்டியெழுப்புவோம்,தற்பாதுகாப்பு போர் சக்தியை கட்டியெழுப்புவோம் என குறிப்பிட்டுள்ளார்.