கண்டியில் இனந்தெரியாத நபர்களால் மாணவி கடத்தல்

செவ்வாய் செப்டம்பர் 15, 2020

 கண்டியில் பிரபல பாடசாலையின் மாணவி ஒருவரை அவரது வீட்டின் முன்னால் வைத்து கடத்திய இனந்தெரியாத நபர்கள் மூன்று மணித்தியாலத்தின் பின்னர் அவரை விடுதலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பிட்ட மாணவி காலை 6.45 மணியளவில் அருகில் உள்ள கடைக்கு செல்வதற்காக வீட்டிலிருந்து வெளியேவந்தவேளை மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் அவரை கடத்தி சென்றனர் என பெற்றோர் காவல் துறையிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனை தொடர்ந்து குறிப்பிட்ட வீட்டிற்கு சென்ற காவல் துறை  மாணவியிடமிருந்த கையடக்க தொலைபேசி மூலம் அவரை தொடர்புகொண்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து கண்டிகாவல் துறை  தமது விசேட பிரிவின் மூலம் கையடக்க தொலைபேசியை கண்காணித்தவேளை கண்டியின் பல பகுதிகளில் மாணவி காணப்பட்டதை அவதானித்துள்ளனர்.
இதன் பின்னர் 9.30 மணியளவில் வேறொரு பாடசாலைக்குஅருகில் மாணவி காணப்பட்டார் மீட்கப்பட்டார் என காவல் துறையிடம் தெரிவித்துள்ளனர்.

மாணவியை கடத்தியவர்கள் யார் என்பதை இதுவரை அடையாளம் காணவில்லை விசாரணைகள் இடம்பெறுகின்றன என காவல் துறையிடம்  தெரிவித்துள்ளனர்.