இதயம், உடலின் மற்ற உறுப்புகளின் ஆரோக்கியத்திற்கு

ஞாயிறு மே 24, 2020

கீழே கூறியவை படிப்பதற்கு அதிகமாகத் தோன்றினாலும் இவைகளை நடைமுறைப்படுத்தும் பொழுது இருதயம் மட்டுமல்ல உடலின் மற்ற உறுப்புகள் ஆரோக்கியம் பெறும்.

உண்ணும் தட்டு சிறிய அளவில் இருத்தல் நல்லது. தட்டில் அதிகமான காய்கறிகள் இருப்பதே நல்லது. நீர் சத்து, நார் சத்து உணவுகளையே உண்ண வேண்டும்.

சர்க்கரை, அதிகம் பாலிஷ் செய்த தூய வெள்ளை சாதம் இவற்றினை அடியோடு நீக்கி விடுவோம். இத்தனை நிமிடங்கள், இத்தனை அடிகள் என்பது அவரவர் வயது, உடல் நிலை இவற்றுக்கு ஏற்ப மாறுபடும். எனவே அவரவர் மருத்துவ ஆலோசனை பெற்ற பின்பே எதனையும் பின் பற்ற வேண்டும்.மேல் கூறப்பட்டுள்ளவை பொதுவான வழிகாட்டிகளே

 * பொதுவில் மதியத்திற்குப்பிறகு கடினமான, கலோரி அதிகமுள்ள உணவுகளை தவிர்த்து விடுவது நல்லது.

* ஒவ்வொரு உணவுக்குப் பிறகும் நீங்கள் பற்பசை கொண்டு பல் துலக்கும் பொழுது உணவு உண்டு முடித்துவிட்ட நிறைவு மனோரீதியாக ஏற்படும்.

* சிறிதளவு கொட்டைகள், விதைகளை அன்றாடம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

* எடையை குறைக்க வேண்டும். இது இருதயத்திற்கு நல்லது. ஆனால் ஒல்லியாக இருப்பவர்கள் எல்லோருமே மிகவும் ஆரோக்கியமானவர்கள் என்ற சுயமுடிவினை யாரும் நினைக்க வேண்டாம்.

* கொழுப்பினை விட சர்க்கரை இருதயத்தினை அதிகம் பாதிக்கக்கூடியது.

* புகை பிடிப்பதால் ஏற்படும் தீங்குகளை அனைவருமே அறிவர்.

* சதா மனஉளைச்சலோடு இருப்பவர்களுக்கு இருதயம் அதிகமாகவே பாதிக்கப்படும்.

* வாயில், ஈறில் வீக்கம் இருந்தால் மருத்துவர் இருதய பரிசோதனை செய்வார்.

* உயர் ரத்த அழுத்தம் இருதயத்தின் எதிரி.

* ஒரு வேலை செய்து முடிக்க முன்பை விட இப்பொழுது கூடுதல் நேரம் எடுக்கின்றது என்றால் அவருக்கு மருத்துவ பரிசோதனை உடனடித் தேவை.

மேற்கூறியவை படிப்பதற்கு அதிகமாகத் தோன்றினாலும் இவைகளை நடைமுறைப்படுத்தும் பொழுது இருதயம் மட்டுமல்ல உடலின் மற்ற உறுப்புகள் ஆரோக்கியம் பெறும்.