இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் பலி-புத்தளம்!

புதன் அக்டோபர் 09, 2019

புத்தளத்தில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில்  ஒருவர் உயிரிழந்ததுடன் ஐவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பன்னல பிரதேசத்தை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான சுனெத் புஞ்சிஹேவா (வயது 33)  என்பவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

ஆனமடுவ பகுதியில் நேற்று முன்தினம் இரு குழுக்களுக்கு இடையில் குறித்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில்  படுகாயமடைந்த ஒருவரை வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக பொலிஸார் அனுப்பி வைத்திருந்தனர்.இந்நிலையில் அவருக்கு தொடர் சிகிச்சை வழங்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) உயிரிழந்துள்ளார்.

வாய்ந்த தர்க்கமே குறித்த மோதலுக்கு காரணமென பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணையை  முன்னெடுத்துள்ளதாகவும் புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.