இராஜாங்கனையில் விதிக்கப்பட்டிருந்த பயணத்தடை நீக்கப்பட்டுள்ளது

வெள்ளி ஜூலை 31, 2020

இராஜாங்கனை பிர​தேசத்தின் சுகாதார வைத்திய அதிகார பிரிவுக்குள் விதிக்கப்பட்டிருந்த பயணத் தடைகள் இன்று (31) முழுமையாக நீக்கப்பட்டுள்ளது.

இராஜாங்கனைப் பிரதேசத்தில் உள்ள 5 கிராமங்களுக்கே, இந்தப் பயணத் தடை விதிக்கப்பட்டிருந்து.

இராஜாங்கனை பிர​தேச சுகாதார வைத்திய அதிகாரப் பிரிவுக்குள்  90 ​பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.