சுவிஸ் தூதரக அதிகாரியின் விவகாரம்!

புதன் டிசம்பர் 11, 2019

ஆளுந்தரப்பு பங்காளிக் கட்சிகளின் தலைவர்களின் கூட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்றது.

 இதன்போது சுவிட்சர்லாந்து தூதரக அதிகாரி கடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் மஹிந்த அமைரவீர தெரிவித்துள்ளார்.

 குறித்த விடயம் பொய்யாது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  இந்த நிலையில், அதன் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பதை கண்டறியவேண்டி உள்ளதாக மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்