சுவிஸ் சூரிச் நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் தமிழ் இளைஞர் பலி!

திங்கள் மார்ச் 30, 2020

சுவிஸ் சூரிச் நகரில் வசித்து வந்த கேசவன் என்று அழைக்கப்படும் இளைஞர் இன்று (30.03.2020) திங்கட்கிழமை சுவிஸ் நேரப்படி அதிகாலை 03.00 மணியளவில் விபத்தில் உயிரிழந்ததாக சுவிஸ் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொழில் காரணமாக வெளியே சென்றபோது வாகன விபத்தில் ஏற்பட்டுள்ளது. வைத்தியசாலையில் அவசரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.