சுவிஸ் சென்ற நிஷாந்த சில்வாவின் உண்மையான பெயர் கந்தப்பா- சரத் வீரசேகர!

புதன் டிசம்பர் 11, 2019

காவல்துறை பரிசோதகர் நிஷாந்த டி சில்வா நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்காக சுவிட்சர்லாந்து தூதரக காரியாலயம் இடமளித்தமை சந்தேகத்துக்கிடமானது என தேசிய அமைப்புக்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.  அந்த அமைப்பு கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்தபோது, ஸ்ரீ லங்கா பூகோள ஒன்றியத்தின் உறுப்பினர் ஓய்வுநிலை ரியர் அட்மிரல் சரத் வீரசேகர இதனை தெரிவித்துள்ளார்.

 கந்தப்பா என்ற தமிழரான அவர், நிஷாந்த சில்வா என்ற சிங்கள பெயரில் தன்னை அடையாளப்படுத்தி, ஜனாதிபதி அதிகாரத்துக்கு வந்ததன் பின்னர் நாட்டிலிருந்து வெளியயேறியுள்ளார்.

 அவர் காவல்துறையில் பணியாற்றும் அதிகாரி ஒருவராவார். இந்த நிலையில், அவருக்கு சுவிட்சர்லாந்து தூதரகம் எவ்வாறு வீசாவை வழங்கியது என சரத் வீரசேகர கேள்வி எழுப்பியுள்ளார்.

 இதேவேளை, இராணுவ முகாம்களில், தமிழ் பெண்களும், சிறுமிகளும் தற்போதும் பாலியல் அடிமைகளாக பயன்படுத்தப்படுகின்றனர் என ஒரு அமைப்பு தெரிவித்துள்ளது.

 தானும் அவ்வாறானதொரு சம்பவத்தை எதிர்கொண்டதாக நிமல்கா பெர்னாண்டோவும் கூறுகிறார். நிமல்கா பெர்னாண்டோவில் மகனான கனிஷ்க ரத்னப்பிரிய என்பவரே சுவிட்சர்லாந்து தூதரகத்தின் அரசியல்துறை பொறுப்பாளராக செயற்படுகிறார்.

 அவர்கள் அனைவரும், இலங்கையில் சமஷ்டியை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுகின்றனர்.

 இந்த நிலையில், எதிர்காலத்தில் யார் யாருக்கு எதிராக செயற்படுவார்கள் என்பது தெரியாது என சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.

 இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள ராஜித்த சேனாரட்னவிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.