சரும வறட்சியை போக்கும் நெய்!

திங்கள் அக்டோபர் 21, 2019

நெய் சரும வறட்சியை தடுத்து புத்துணர்ச்சியை அளிக்கின்றது. . நெய்யை எந்த முறையில் பயன்படுத்தினால் சரும அழகை பாதுகாக்க முடியும் என்று அறிந்து கொள்ளலாம்.

நெய் ஆரோக்கியமான மற்றும் எடை அதிகரிப்பதற்கு உதவுகின்றது. நெய் மென்மையான மற்றும் ஆரோக்கியமான தோலை பெற பயன்படுத்தப்படுகிறது.

* நெய் சரும வறட்சியை தடுத்து புத்துணர்ச்சியை அளிக்கின்றது. சிறிதளவு நெய்யை சருமத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்யவும். விரைவில் சருமம் உலர்வதை தடுத்து எதிர்காலத்தில் சரும வறட்சியை தடுக்க பாதுகாப்பான மருந்தாகும்.

* உங்களுக்கு எண்ணெய் குளியல் பிடிக்குமா? அப்போ நெய்யை பயன்படுத்தவும். நெய் எண்ணெய் குளியலுக்கு ஏற்ற பயனுள்ள பொருள். 5 மேசைக்கரண்டி நெய் மற்றும் நீங்கள் உபயோகிக்கும் எண்ணெய் 10 துளிகள் சேர்த்து உடலில் தடவி குளித்தால் மிகவும் மென்மையான தோலை பெறலாம்.

* உங்கள் கண்கள் சோர்வடைவதால் களைப்படைவதால் பாதிக்கப்படுகின்றவரா நீங்கள் சிறிது நெய்யை எடுத்து கண்களை சுற்றி பூசுங்கள். இவ்வாறு தினமும் செய்து வந்தால் கண்கள் சோர்வடைவது குறையும்.

* நெய் உலர்ந்த உதடுகளை தடுத்து பளபளப்பான மற்றும் இளஞ்சிவப்பு உதடுகளை அளிக்கின்றது. அதற்கு தினமும் படுக்க போவதற்கு முன்னால் சிறிதளவு நெய்யை உதட்டில் தடவி வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்.