சிறிலங்கா வந்தடைந்தனர் 46 பணிப்பெண்கள்!

வெள்ளி பெப்ரவரி 14, 2020

குவைத்திலிருந்து 46 வீட்டுப் பணிப்பெண்கள் இன்று (வெள்ளிக்கிழமை) சிறிலங்கா  வந்தடைந்துள்ளனர்.

குவைத்திலிருந்து சிறிலங்கா  ஏர்லைன்ஸ் விமானம் யு.எல்-230 இன் ஊடாக இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே பெரும்பாலானோர் வருகை தந்துள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

வீட்டு உரிமையாளர்களின் துன்புறுத்தல்களை பொறுத்துக்கொள்ள முடியாமல் வீடுகளை விட்டு வெளியேறும்போது, காவல் துறை  இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் 13 பேர் குவைத் சி.ஐ.டி.அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். மீதமுள்ள 33 பேர் குவைத்தில் உள்ள சிறிலங்கா  தூதரகத்தில் உள்ள ‘சூரக்ஷா’ தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையிலேயே தற்போது குறித்த 46 பேரும் சிறிலங்கா  ஏர்லைன்ஸ் விமானம் யு.எல்-230 இன் ஊடாக இன்று நாட்டை வந்தடைந்துள்ளனர்.