சீனாவின் புது விளக்கம்!!

வெள்ளி அக்டோபர் 09, 2020

உலக நாடுகளை இன்று விழி பிதுங்க வைத்துக்கொண்டு இருக்கும் கொரோனா வைரஸ் முதன் முதலில் கடந்த ஆண்டு இறுதியில் சீனாவின் உகான் நகரில் தான் கண்டுபிடிக்கப்பட்டது.  

இந்த வைரஸ் முதன் முதலாக கண்டறியப்பட்டு 10 மாதங்கள் ஆகியுள்ள போதிலும் உலக நாடுகள் இதைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது.

உலக வல்லரசு நாடான அமெரிக்காவே இந்த வைரஸ் பரவலால் நிலைகுலைந்து போனது.உலக அளவில் அதிகம் பாதித்த நாடாக உள்ள அமெரிக்கா, இதனால்,சீனா மீது அவ்வப்போது இந்த விவகாரத்தில் விமர்சனங்களை முன்வைத்து வருகிறது.

குறிப்பாக டிரம்ப் கொரோனா வைரஸ் பரவலுக்கு சீனாவே காரணம் என பலமுறை வெளிப்படையாக குற்றம் சாட்டி வருகிறார்.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் தங்கள் நாடுகளில் இருந்து பரவவில்லை என சீனா புது விளக்கம் அளித்துள்ளது.

சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-“கடந்த ஆண்டு சீனாவில் கொரோனா வைரஸ் கண்டறியப்படுவதற்கு முன்பாகவே உலகின் பல்வேறு இடங்களில் இந்த வைரஸ் வெளிப்பட்டது.

ஆனால் நாங்கள் மட்டுமே நோய்க்கிருமியை கண்டறிருந்து, அதுகுறித்து வெளியே தெரிவித்து,முதலில் வைரசுக்கு எதிராக செயல்பட்டோம்.  அதன் மரபனு வரிசையை உலகத்துடன் பகிர்ந்து கொண்டோம்.

கொரோனா வைரஸ் தொற்று நோயாக அறிவிக்கப்படுவதற்கு முன் வுகானில் கண்டறியப்பட்டது என்பதை நாங்கள் மறுக்கிறோம். கொரோனா வைரஸ் புது வகையான வைரஸ் என்பதால், தினம் தினம் புது புது தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன” என்றார்.